மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்: பயன்பெற அழைப்பு
உடுமலை; உடுமலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வள மையம் சார்பில், வரும் 5ம் தேதி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உடுமலை வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், வரும், 5ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.இம்முகாமில், குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனை, மன நல மருத்துவர் ஆலோசனை, எலும்பு, மூட்டு, காது, மூக்கு, தொண்டை கண் என அனைத்து பிரிவு மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.இம்முகாமில், பிறப்பு முதல், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்படும்.புதிய தேசிய அடையாள அட்டை பெறுதல் மற்றும் புதுப்பித்தல், யு.டி.ஐ.டி., பதிவு செய்தல், பஸ், ரயில் பயணச் சலுகை பாஸ், இலவச அறுவை சிகிச்சை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்படும்.பெற்றோர்கள் இம்முகாமிற்கு வரும்போது, பிறப்புச்சான்றிதழ், மாணவர், பெற்றோரின் ஆதார், மாணவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -5, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு, 88984 09884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.