உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வணிகர் சங்கம் ஆலோசனை

வணிகர் சங்கம் ஆலோசனை

பல்லடம்: பல்லடம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம், தினசரி மார்க்கெட் வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட ஆலோசகர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் தங்கராஜ், சுப்பிரமணியம், பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீராய்வு மற்றும் வரி குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், கோவையில் நடக்கும் பாராட்டு விழாவில், வணிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வணிக கடைகளின் வாடகை அதிகம் உள்ளதால், அதற்கு இணையாக ஜி.எஸ்.டி. கட்ட வேண்டி உள்ளது. இதனால், வணிகர்கள் பாதிக்கப்படுவதால், ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும். கொரோனா கால வாடகை தள்ளுபடியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராஜன், விஜயலட்சுமி உட்பட வணிகர்கள் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ