உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எம்.ஜி.ஆர். நினைவு நாள்  அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

 எம்.ஜி.ஆர். நினைவு நாள்  அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

திருப்பூர்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 38வது நினைவு நாளையொட்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பல்வேறு இடங்களில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், கட்சியினர், எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். குமரன் சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., படத்துக்கு, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார், காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், தினேஷ், மகளிர் அணியினர் என, பல்வேறு அணி நிர்வாகிகளும் பங்கேற்று, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.  காந்தி நகர் பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே, பகுதி செயலாளர் கருணாகரன் தலைமையில், எம்.எல்.ஏ., விஜயகுமார் உட்பட நிர்வாகிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.  மங்கலம் ஊராட்சி பகுதியில், அலுவலகம் முன்பு, எம்.ஜி.ஆர்., படத்தை அலங்கரித்து, கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தனர். பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.  பொங்கலுார் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இணை செயலாளர் ஜீவாமணி, மாவட்ட பிரதிநிதி சித்ரா, மாதப்பூர் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் பாலசுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.  அவிநாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தில், ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையில், எம்.ஜி.ஆர். படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் வார்டு உறுப்பினர்கள் சண்முகம், யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ