உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நம்பிக்கை தருகிறார் அமைச்சர் 

குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நம்பிக்கை தருகிறார் அமைச்சர் 

திருப்பூர், செப். 10– திருப்பூர் மாநகராட்சியில் காலாவதியான பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கழிவு மேலாண்மைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி, ‘திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு’ சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அருண்ராஜிடம் மனு அளித்தனர். மனுவில், ஒவ்வொரு வார்டிற்கும் தனித்துவமான கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதிகளவில் கழிவுகளை உருவாக்கும் வணிக நிறுவனங்களுக்கு தனி சுத்திகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காலாவதியான பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். கழிவு மேலாண்மை திட்டங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்ற அமைச்சர், திருப்பூரின் குப்பை பிரச்னை குறித்து ஏற்கெனவே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல் நலன் கருதி விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி