உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் ஏஜன்சிகள் மீது கண்காணிப்பு அவசியம்

காஸ் ஏஜன்சிகள் மீது கண்காணிப்பு அவசியம்

திருப்பூர்: கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம்அளித்த மனு: காஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் எடை போட்டு வினியோகிக்க வேண்டும். இதனை பின்பற்றாத ஏஜன்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் ஆறு சிலிண்டர்களை கொண்டு செல்கின்றனர். அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். சிலிண்டர் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களில் ஏஜன்சியின் பெயர் எழுதப்பட வேண்டும். தனியார் காஸ் ஏஜன்சிகள் எந்த கண்காணிப்பும் இன்றி, குறைந்த விலையில் சிலிண்டர்களை வழங்குகின்றனர். அனைத்து நிறுவன சிலிண்டர்களும் இந்த நிறுவனங்களின் கிடங்குகளில் உள்ளன. இதுபோல் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் இவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை