உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொசுக்கள் படையெடுப்பு

கொசுக்கள் படையெடுப்பு

கொடுவாயில் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க சந்தைக்கடை அருகே 1.27 லட்சம் ரூபாய் செலவில் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது. கழிவு நீர் அனைத்தும் உறிஞ்சு குழிக்கு செல்லும் வகையில் கால்வாய் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் முழுவதும் அருகில் உள்ள நீரோடைக்கு செல்கிறது. கால்வாயில் தண்ணீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் உற்பத்தியாகி கொசுக்களாக மாறி வருகின்றன. அருகில் வசிக்கம் பொதுமக்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமலும், கொசுக்கடியாலும் நோய்வாய்ப்பட்டு நாள்தோறும் மருத்துவமனைக்கு படை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. சாக்கடையை சுத்தம் செய்து கழிவுநீர் தேக்கத்தை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !