உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் கவிழ்ந்து விபத்து தாய் - மகள் படுகாயம்

கார் கவிழ்ந்து விபத்து தாய் - மகள் படுகாயம்

பல்லடம், ;செஞ்சேரிமலையில், கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், தாய், மகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை மாவட்டம், சூலுாரைச் சேர்ந்த ரவி மனைவி வாணி, 48 மற்றும் மகள் ஸ்ரீ நிவேதா 25. இருவரும், நேற்று காலை, சுல்தான்பேட்டையை அடுத்துள்ள, செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டனர்.ஸ்ரீநிவேதா கார் ஓட்டினார். செஞ்சேரிமலையில், காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது, பிரேக் பிடிப்பதற்கு பதிலாக, எக்ஸ்லேட்டரை மிதித்ததாக கூறப்படுகிறது.இதனால், முன்னோக்கி சென்ற கார், 40 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மீட்பு பணியில் இறங்கினர். தலை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், தாய் மகள் இருவரும், ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடம் பாறைகள் மிகுந்த பகுதியாகும். அதிர்ஷ்டவசமாக, தாய், மகள் இருவரும் காயங்களுடன் தப்பித்தனர்.விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ