உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அன்னை ஸ்ரீசாரதாதேவி 175வது ஜெயந்தி விழா

அன்னை ஸ்ரீசாரதாதேவி 175வது ஜெயந்தி விழா

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில் சன்னதி வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தின் ஸ்ரீ சாரதா தேவி நிவாஸ் வளாகத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 173வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை மங்கல ஆரதி, பஜனை, திருப்பாவை பாராயணம், ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம பாராயணம் ஆகியவை நடந்தன. சிறப்பு பூஜை, 1008 போற்றிகள் குங்கும அர்ச்சனை ஆகியவை நடந்தன.மாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி