உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில தடகளப் போட்டியில் முருகு பள்ளி மாணவர்கள்

மாநில தடகளப் போட்டியில் முருகு பள்ளி மாணவர்கள்

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, ஜே.பி., நகரில் செயல்படும் முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், டீ பப்ளிக் பள்ளியில் நடந்த மாவட்ட தடகளப்போட்டிகளில் வென்று, தஞ்சையில் நடைபெற உள்ள மாநில தடகளப்போட்டிக்கு தேர்வாயினர். 14 வயதினர் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தருண், தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். 17 வயதினர் பிரிவில் 1,500 மீ., ஓட்டத்தில் தங்கம், 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சூர்யநாராயணன், கிர்திக், சர்வேஷ், ஹரிஷ், கார்த்திகேயன் ஆகியோர் 4 x 400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளி, 19 வயதினர் பிரிவில் வினய் 3,000 மீ. ஓட்டத்தில் தங்கம், 1,500 மீ, 800 மீ. ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ஸ்ரீராம்சுரத் ஆகியோரையும் தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா பசுபதி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை