உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாகர்கோவில் - கோவை ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்

நாகர்கோவில் - கோவை ரயில் கரூர் வரை மட்டும் இயக்கம்

திருப்பூர்; வரும், 28 மற்றும், 30ம் தேதி நாகர்கோவில், திருச்சியில் இருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.ஈரோடு - கரூர் ரயில் பாதையில், மூர்த்திபாளையம் அருகே தண்டவாள மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், வரும், 28 மற்றும், 30ம் தேதி என இரண்டு நாட்கள் நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் ரயில் (எண்:16321) கரூர் வரையும், திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) மூர்த்திபாளையம் வரையும் இயக்கப்படும்.பொறியியல் மேம்பாட்டு பணிகள் முடிந்த பின் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை