உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய கால்பந்து போட்டி தி எஸ்.சி.வி., பள்ளி சாதனை

தேசிய கால்பந்து போட்டி தி எஸ்.சி.வி., பள்ளி சாதனை

திருப்பூர் : ஓசூர், மதகொண்ட பள்ளி மாடல் பள்ளியில் தென் மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான 'பிரீ சப்ரோட்டோ கப் 2025' கால்பந்து போட்டி நடந்தது.இதில், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில், முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் ஸ்ரீ குருமுகி வித்யாஷ்ரம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யாமந்திர் அணிகளை, திருப்பூர், கணியாம்பூண்டி தி எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி அணி வென்றது.அரையிறுதியில் அசோக் லேலண்ட் பள்ளி அணியை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிபோட்டியில், ஓசூர் அத்வைத் பள்ளி அணியை 7 - 0 என்ற கோல் கணக்கில் வென்று வெற்றி வாகை சூடியது.இதன் மூலம் வரும், 23 - 27 வரை உத்தரகாண்ட், ருத்பூரில் நடைபெற தேசிய சி.பி.எஸ்.இ., 'பிரீ சப்ரோட்டோ கப் 2025' கால்பந்து போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பை தி எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி அணி பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் சார்பில் தேர்வாகி, தமிழகத்தில் இருந்து தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்கு செல்லும் அணி என்ற பெருமை, இதன் மூலம் கிட்டியுள்ளது. பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளித்தாளாளர் முருகசாமி, முதல்வர் தாரணி, துணை முதல்வர் தீபா கொங்குவேல், ஒருங்கிணைப்பாளர் தீபா சுப்ரமணி, உடற்கல்வி ஆசிரியர் சரண் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை