உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு யாகம்

பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு யாகம்

பல்லடம் : பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரத்துடன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். அக்., 3ம் முதல், இங்கு நவராத்திரி விழா துவங்கி நடந்து வருகிறது.முன்னதாக, கடந்த 3ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலச பூஜை, ஸ்ரீ தக் ஷிண காளி மூல மந்திர வேள்வி மற்றும் சிறப்பு யாகங்களுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினசரி, ஜெய துர்கா, தாராதேவி, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி உள்ளிட்ட தேவதைகளுக்கான ஹோமங்கள் நடந்தன.அக்., 12 வரை தினசரி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்க உள்ளன. தினசரி, 10 பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில்ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை