உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எலாஸ்டிக் உற்பத்தியில் புதிய சவால்கள்

எலாஸ்டிக் உற்பத்தியில் புதிய சவால்கள்

திருப்பூர் : 'ஜாப் ஒர்க்' கட்டணம் முறையாக கிடைக்காததும், ஜி.எஸ்.டி., 'ரீ- பண்ட்' இழுபறியும் எலாஸ்டிக் உற்பத்தி புதிய சவாலாக மாறியுள்ளது.திருப்பூர் பின்னலாடை தொழிலில், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள் தயாரிக்க, பல்வேறு வகை சேவைகள் அத்தியாவசியமாகின்றன. பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பில், எலாஸ்டிக் பயன்பாடு மிக அவசியம்.

300 நிறுவனங்களில் 10 ஆயிரம் தொழிலாளர்கள்

பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான எலாஸ்டிக் சப்ளை செய்யும் நிறுவனங்கள், 300க்கும் அதிகமாக திருப்பூரில் இயங்கி வருகின்றன; அந்நிறுவனங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், ரப்பர் நுாலிழை மற்றும் ஒருவகை பாலியஸ்டர் நுாழை பயன்படுத்தி, எலாஸ்டிக் உற்பத்தி செய்கின்றன. அதற்காக, கேரளா மற்றும் அசாமில் இருந்து, ரப்பர் நுாலிழை கொள்முதல் செய்யப்படுகிறது. இத்தொழிலின் முக்கிய மூலப்பொருளாகிய ரப்பர் உற்பத்தி, கோடை மற்றும் மழை காலங்களில் பாதிக்கிறது.

வெளிநாட்டில் இருந்துரப்பர் இறக்குமதி

இவ்விரு பருவங்களில், மூலப்பொருளாகிய ரப்பர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. திருப்பூரில், 'நிட்டிங்', சாய ஆலைகள், பிரின்டிங் போன்றவை, 'ஜாப் ஒர்க்' சேவையை செய்கின்றன.எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனமும், 'ஜாப் ஒர்க்' வகை என்றாலும், இது முக்கிய மூலப்பொருட்களை பயன்படுத்தி இயங்கி வருகின்றன. இருப்பினும், சில மாதங்களாக, பொருளாதாரம் மந்தமாக இருப்பதால், 'ஜாப் ஒர்க்' கட்டணங்கள் உரிய காலத்தில் கிடைக்காமல், திருப்பூரின் குறு, சிறு நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

மாதம் 1000 டன்ரப்பர் தேவை

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு எலாஸ்டிக் சப்ளை செய்ய, மாதம், 1000 டன் அளவுக்கு ரப்பர் தேவைப்படுகிறது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டால், மொத்தமாக இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கிலோ ரப்பர், வரி நீங்கலாக 250 முதல், 280 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது; இதற்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ