உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செஞ்சேரிமலை முருகன் கோவிலில் புதிய சிலை பிரதிஷ்டை இழுத்தடிப்பு

செஞ்சேரிமலை முருகன் கோவிலில் புதிய சிலை பிரதிஷ்டை இழுத்தடிப்பு

பல்லடம்; சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலையில் முருகன் கோவில்உள்ளது. மூலவராக மந்திரகிரி வேலாயுத சுவாமி அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், படிக்கட்டுகள் வழியாக மலைக்குச் செல்லும் வழியில் குழந்தை குமாரர் கோவில் உள்ளது.பக்தர்கள் கூறியதாவது:மனநலம் பாதித்த ஒருவரால், கடந்த ஓராண்டுக்கு முன் குழந்தை குமாரர் சிலை சேதப்படுத்தப்பட் டது. சிலையின் வலது கை மற்றும் மயிலின் தலை உடைபட்டது. சிலை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில், ஆறு மாதத்துக்கு முன் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.அறநிலையத்துறை இணை கமிஷனர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சிலையை புதுப்பிக்க உத்தரவிட்டார். உபயதாரர்கள் உடனடியாக சிலையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.புதிய சிலை தயாராகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், பிரதிஷ்டை செய்யாமலும், பழைய உடைந்த சிலையை அகற்றாமலும் அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. உடைந்ததை அகற்றி, புதிய சிலையை பிரதிஷ்டை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ