உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதாரம் இல்லை ஊராட்சியில் பாதிப்பு

சுகாதாரம் இல்லை ஊராட்சியில் பாதிப்பு

உடுமலை : செல்லப்பம்பாளையம் ஊராட்சியில், வீடுதோறும் குப்பைக்கழிவுகளை சேகரிப்பதில் தாமதம் ஏற்படுவதால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.உடுமலை ஒன்றியத்தின் கடைக்கோடி ஊராட்சியாக செல்லப்பம்பாளையம் உள்ளது. சுகாதார பிரச்னைகளில் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் ஒன்றிய அலுவலகத்தில் கொடுத்த மனு கொடுத்தனர்.அவர்கள் கூறியதாவது: செல்லப்பம்பாளையத்தில் உள்ள பெரும்பான்மையான வார்டுகளில், வீடுகள் தோறும் குப்பைக்கழிவுகள் முறையாக சேகரிக்கப்படுவதில்லை. இதனால் பலரும் திறந்த வெளியில் குப்பையை கொட்டி விடுகின்றனர்.இருபது நாட்களுக்கும் மேலாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. குடிநீர் குழாய் அருகில் சாக்கடை கழிவுகள் இருப்பதால், மிகுதியான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பஸ் ஸ்டாப் அருகே தெருநாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே, ஊராட்சியின் சுகாதாரத்தை உறுதிபடுத்த முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ