சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலார் பரிபூரணம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.'குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 6,750 ரூபாயை, அகவிலைப்படியுடன் வழங்கவேண்டும். ஈமக்கிரியை சடங்கு நிதி, 25 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களை இணைத்திடவேண்டும்,' என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.