உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
திருப்பூர் : பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டி மையம் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் பெற்றோர் வசதிக்காக, கலெக்டர் அலுவலக வளாகத்தின், 7வது தளத்தில், 705ம் எண் அறையில், உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.தேவைப்படுவோர், நேரிலோ, 63826 15181, 0421 2971198 என்ற எண்ணிலோ, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.