உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொசு உற்பத்தி பகுதி கண்டறிய உத்தரவு

கொசு உற்பத்தி பகுதி கண்டறிய உத்தரவு

திருப்பூர்; வானிலை மாற்றம், அவ்வப்போது துாறல் மற்றும் தொடர் மழை, குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக, நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு குளிர், ஜூரம், சளி, இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. வயதானவர்கள், இணைநோயுடன் தொடர் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக, டெங்கு காய்ச்சல் வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, உடனடியாக அங்கிருந்து கொசுக்களை ஒழிக்க வேண்டும்.கொசுக்களை லார்வா நிலையிலேயே கண்டறிவதுடன், தொடர்ந்து மீண்டும் அவை வளராமல், பரவாமல் இருக்க அவ்விடத்தை சுத்தமானதாக மாற்ற வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறைக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ