உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலக்காடு - திருச்சி ரயில் இயக்கம் மாற்றம்

பாலக்காடு - திருச்சி ரயில் இயக்கம் மாற்றம்

திருப்பூர்; 'பாலம் பணி நடப்பதால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில், வழித்தடத்தில், 45 நிமிடம் நிறுத்தப்பட்டு, அதன் பின் இயக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் பாலம் கட்டுமான பணி, பழைய பாலம் இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில், திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) நாளை (6ம் தேதி முதல்) வரும், நவ., 21ம் தேதி வரை, 16 நாட்களுக்கு, திருச்சி ஜங்ஷனுக்கு பதிலாக, திருச்சி போர்ட் ஸ்டேஷனில் இருந்து பயணத்தை துவங்கும். மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயில் (எண்:16844) மேற்கண்ட நாட்களில், வழித்தடத்தில் ஏதேனும் ஒருபகுதியில், 45 நிமிடம் நிறுத்தப்பட்டு, பின் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ