உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலை; குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில், குடோன்கள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் புஷ்பராஜ், பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியம், மாலா முன்னிலை வகித்தனர்.குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள சிமென்ட் குடோன்களை, ஒன்றிய பொது நிதியில் மேம்பாடு செய்தல்; குடிமங்கலத்தில், புதிய துணை சுகாதார மைய கட்டடம் கட்ட ஒன்றிய பொது நிதியில், பங்களிப்புத்தொகையாக, 30 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், ஒன்றிய பொது நிதியில், அனைத்து வார்டுகளுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொது நிதியில் கிராம வளர்ச்சிப்பணிகளுக்கு மட்டுமே, முக்கியத்துவம் வழங்க வேண்டும் என, கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை