உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி; வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி; வர்த்தகர்கள் நெகிழ்ச்சி

இன்றைய சூழலில், வீடுகளின் வரவேற்பறை மெகா ஸ்கிரீன் கொண்ட 'டிவி' அலங்கரிக்கிறது. 'ஏசி' என்பதும் அத்தியாவசியமாகி விட்டது. வீட்டுக்கு ஒரு வாகனம் என்ற நிலைமாறி வீடுகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த வாகனம், அதாவது, கார், டூவீலர் என்ற நிலை உருவாகியிருக்கிறது. குக்கர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திரங்கள் என, வீடுகளின் சமையலறைக்கு, அலுமனிய பாத்திரங்கள் அவசியமானதாக மாறியிருக்கிறது. இதுநாள் வரை இவற்றுக்கான ஜி.எஸ்.டி., என்பது சாதாரண, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள வரி சீர்திருத்தத்தால், பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிடைக்கும் பலன் என்ன? 'மக்களுக்கு சுமை அல்ல; சேமிப்பு' என்பதே, மத்திய அரசின் ஜி.எஸ்.டி., சீர்திருத்தக் கொள்கை. ஜி.எஸ்.டி.,க்கு முன், நம் நாட்டு மக்கள், பல்வேறு ஒழுங்கற்ற, வெளிப்படாத வரிகள் வாயிலாக பாதிக்கப்பட்டனர். மாநிலத்திற்கு மாநிலம் மாறும் வாட், சேவை வரி, எக்சைஸ், ஆக்ட்ராய், லக்சுரி டாக்ஸ் என பல வரிகள் இருந்தன. சோப்பு, பேஸ்ட், எண்ணெய், பிஸ்கட் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள், 25 முதல், 30 சதவீதம் வரை மறைமுக வரி சுமையுடன் விற்பனையாகின. ஒரு சாதாரண குடும்பத்தினர், மாதம், எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பதை அறியாமல் இருந்தனர். கடந்த 2017ல், ஜி.எஸ்.டி., வந்த பின், ஒரே நாடு, ஒரே வரி நடைமுறைக்கு வந்தது; வரி விதிப்பு வெளிப்படைத்தன்மையுடன் இருந்தது. தற்போதைய மத்திய அரசின் வரி சீர்திருத்தம் வாயிலாக, ஒரு நடுத்தர குடும்பம், 5,000 ரூபாய் மதிப்பில், மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கினால், 500 முதல், 600 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த வரி சீர்திருத்தத்தில், ஆடம்பர கார்கள், ஆடம்பர பொருட்கள், மது, சிகரெட் உள்ளிட்டவற்றின் மீது வரி உயர்ந்தாலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் முழுமையாக காக்கப்ப ட்டுள்ளன. அதன்படி, ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் என்பது, வரி கொள்கை மட்டுமல்ல; மக்களின் குடும்ப செலவுகளை எளிதாக்கும் சேமிப்பு திருவிழா என்பது மிகையில்லை. - ஜெய்பிரகாஷ் ஸ்டார்ட் அப் ஆலோசகர் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் மீதும், 99 சதவீதம் வரி குறைந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்கள், டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், கட்டில், மெத்தை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட அனைத்துக்கும் வரி குறைந்ததால், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மோட்டார், பைக், ஸ்கூட்டர், கார் உள்ளிட்டவற்றின் ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்டுள்ளதால், நடுத்தர மக்களின் கனவு நினைவாக போகிறது. பொதுமக்களின் சுமை பெரிதும் குறைந்துள்ளது. சேமிப்பு அதிகரிக்கும் என்பதால், நாடு முன்னேறும். மக்களுக்காக பிரதமர் வழங்கியுள்ள தீபாவளி பரிசு அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. - கண்ணையன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பல்லடம் கிளை தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kanagasundaram
செப் 26, 2025 11:18

ஏர்டெல் மற்றும் ஜியோ GST பொருந்துமா? குறைக்கவில்லை.


Vasan
செப் 24, 2025 16:25

Why price of day to day consuming essential commodities like milk, hasnt reduced? Aavin 500 ml milk Blue pocket is sold for Rs 20 in Aavin parlour.


VENKATASUBRAMANIAN
செப் 24, 2025 08:58

பாஜக தூங்குகிறது. இதை உடனே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டாமா. இல்லையெனில் திமுக ஸ்டிக்கர் ஒட்டி விடும். என்றைக்குத்தான் பாஜாகாவிற்கு புரியுமோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை