மேலும் செய்திகள்
'டயாபர்' தொழிற்சாலை பணிகளை நிறுத்த உத்தரவு
27-Mar-2025
திருப்பூர்; பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு; கிராம சபை தீர்மானம் ஆகியவற்றை தொடர்ந்து, பல்லடம் தாலுகா, வாவிபாளையத்தில் 'டயாபர்' தயாரிப்பு தொழிற்சாலை கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தனி அலுவலரால் 'டயாபர்' நிறுவனத்துக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டது. கட்டட பணிகள் மீண்டும் துவங்கின.கட்டட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு, கடந்த மார்ச் 26ல், வாவிபாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கட்டட அனுமதி ரத்து செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.இந்நிலையில், வாவிபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் 800 பேர் திரண்டு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:வாவிபாளையம் கிராமம், பி.ஏ.பி., பாசனத்தின் ஆயக்கட்டு பகுதிகள் நிறைந்த விவசாய பகுதி. உள்ளூர் திட்ட குழுமம் வெளியிட்டுள்ள வகைப்பாட்டில், கிராமம் முழுவதும் விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தை வாங்கிய தனியார், 'டயாபர்' தொழிற்சாலை அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர்.தொழிற்சாலை அமைந்தால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு ஊறு நேரிடும். 'டயாபர்' நிறுவனம் அமைக்கக்கூடாது. கட்டுமான அனுமதி உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இல்லாவிடில், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
27-Mar-2025