மேலும் செய்திகள்
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
21-Apr-2025
அவிநாசி, ;அவிநாசி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அவிநாசியில் நேற்று நடந்தது. திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், சமூக ஆர்வலர் சரவணன் அளித்த மனு: அனுப்பர்பாளையம் கிராம மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில், 10க்கும் அதிகமான வீடுகளுக்கு, விதிகளுக்கு புறம்பாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பழுதான மின்கம்பங்களை உடனடியாக மாற்றாதது, மின் விபத்து ஏற்படும் அளவுக்கு செடி, கொடி படர்ந்தும், அகற்றாமல் இருப்பது போன்ற மெத்தன போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, செடி, கொடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
21-Apr-2025