உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் தொட்டி உடைப்பு; போலீசார் விசாரணை

குடிநீர் தொட்டி உடைப்பு; போலீசார் விசாரணை

காங்கயம்; காங்கயத்தில் குடிநீர் தொட்டி உடைப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட, 18வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் திட்டம் மற்றும் அமராவதி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாகவும், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வார்டு பகுதிகளில் தினசரி நீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளைகிணறு அமைத்து, 5 ஆயிரம், 10 ஆயிரம் லிட் டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், 9வது வார்டு, லட்சுமி நகரில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி ஒன்று அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அந்த நீர் தேக்க தொட்டியை முழுவதுமாக சேதப்படுத்தி, கீழே தள்ளி, அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ