பாலிதீன் பறிமுதல்; 9 கடைக்கு அபராதம்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள், டம்ளர், தட்டு போன்றவற்றின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இது குறித்த புகார்களின் பேரில் மாநகராட்சி சுகாதார பிரிவினர் அவ்வப்போது பகுதி வாரியாக கடைகளில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றனர்.அவ்வகையில் நேற்று, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர் நல அலுவலர் முருகானந்த் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆய்வு நடத்தினர்.ஆய்வின் போது, 9 கடைகளில், பாலிதீன் கவர்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்து, 50 கிலோ பாலிதீன் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.