உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் படுகுழி வாகன ஓட்டிகள் கிலி

ரோட்டில் படுகுழி வாகன ஓட்டிகள் கிலி

பல்லடம்: நடுரோட்டில் ஏற்பட்ட குழி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.மேற்கு பல்லடம், நியூ எக்ஸ்டன்சன் வீதியில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வங்கிகள், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதன் காரணமாக, இந்த ரோட்டில் அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்கின்றன.போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டின் ஒரு பகுதி மழை நீரில் கரைந்து சென்றதால், படுகுழி உருவாகி, இது, நாளுக்கு நாள் விரிவடைந்தும் வருகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், படுகுழியில் சிக்காமல் விலகிச் செல்ல முயற்சிப்பதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதியும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.மேலும், இரவு நேரங்களில், வெளிச்சமின்மை காரணமாகவும், வாகன ஓட்டிகள் படுகுழியில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ