சாலையோரம் குழி; பொதுமக்கள் கிலி
பல்லாங்குழி சாலை அவிநாசி, சுதந்திர நல்லுாரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்குகிறது. சாலையை சீரமைக்க வேண்டும். - பிரபு, சுதந்திரநல்லுார். குப்பை தேக்கம் 1. திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர். நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். ரோட்டோரத்தில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. - செந்தில்குமார், கே.வி.ஆர்., நகர். 2. திருப்பூர், சூசையாபுரத்தில் குப்பை தொட்டி நிறைந்து, குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. குப்பைகளை அள்ள வேண்டும். - வின்சென்ட்ராஜ், சூசையாபுரம். கால்வாய் அடைப்பு 1, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, சக்திநகர், பழைய இ.பி.ஆபீஸ் வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. அடைப்பை சரிசெய்ய வேண்டும். - சுந்தரமகாலிங்கம், மண்ணரை. 2. திருப்பூர், காங்கயம் ரோடு, ஜே.எஸ்., கார்டனில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடும் நிலை உள்ளது. - சதீஸ், ஜே.எஸ்., கார்டன். 3.பல்லடம் நகராட்சி, 8வது வார்டு, பச்சாபாளையத்தில் சாக்கடை கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும். - ராயப்பன், பச்சாபாளையம். வீணாகும் தண்ணீர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சீரமைக்க வேண்டும். - தர்மராஜ், பாளையக்காடு. அரிசிக்கடை வீதி - பெருமாள் கோவில் சந்திப்பில், குழாய் உடைந்து தண்ணீர் நாள் முழுதும் வீணாகிறது. - நாரயணமூர்த்தி, அரிசிக்கடை வீதி. இரண்டாவது ரயில்வே கேட், புதுராமகிருஷ்ணபுரம் மாநகராட்சி பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. - சேது, புதுராமகிருஷ்ணபுரம். மங்கலம் ரோடு, கருவம்பாளையம் எக்ஸ்டன்ஷன் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது; சாலை சேதமாகிறது. - ராஜூ, கருவம்பாளையம். விபத்து அபாயம் திருப்பூர் - பல்லடம் ரோடு, அலங்கார் தியேட்டர் சந்திப்பு எதிர்புறம் ரோட்டோரத்தில் உள்ள குழியை மூட வேண்டும். விபத்து அபாயம் உள்ளது. - முருகேசன், மகாலட்சுமி நகர்.