விசைத்தறி வேலை நிறுத்தம் எதிரொலி; உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் பேச்சு
திருப்பூர்; விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம், ஜவுளி உற்பத்தியாளர்களை நேற்று அழைத்து பேசியது.கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சோமனுார் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், கடந்த முறை ஒப்பந்தம் செய்த கூலியுடன், புதிதாக கூலி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1cilbm4s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல்லடம் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், கடந்த 2022ல் ஒப்பந்தம் செய்தபடி, கூலி உயர்வு வழங்குவதில்லை. ஒப்பந்தம் செய்தபடி, கூலி உயர்வு வழங்க வேண்டு மென வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன், மாவட்ட நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. கலெக்டர் கிறிஸ்துராஜ், தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.தொழிலாளர்துறை உதவி கமிஷனர் பிரேமா மற்றும் கைத்தறித்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதுகுறித்து தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமரசம்) பிரேமா கூறுகையில், ''கலெக்டர் தலைமையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.கடந்த முறை ஒப்பந்தம் செய்த கூலியை, படிப்படியாக வழங்கி வருவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலைமை சரியில்லாததால், 60 சதவீதம் புதிய கூலி உயர்வு வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்,'' என்றார்.