மருத்துவமனைகளில் தீவிபத்து தடுக்க முன்னெச்சரிக்கை
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து மாவட்டம் முழுதும் மருத்துவமனைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.'மருத்துவமனைகளில் இருக்கும் தீ பாதுகாப்பு கருவி முறையாக செயல்படுகிறதா, எச்சரிக்கை கருவிகள் இயக்கம், அலாரம் செயல்பாடுகளை பரிசோதனை செய்ய வேண்டும்.மின்இணைப்பு தொடர்பான சமீபத்திய கணக்கீடுகளை கைவசம் வைத்திருப்பதுடன், மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள தீயணைப்பு துறையிடம், மருத்துவமனையில் அனைத்து மின்பாதுகாப்பு வசதிகளும் உள்ளது என 'என்.ஓ.சி.,' பெற்றிருக்க வேண்டும். அவசர காலத்தில் மருத்துவமனை பணியாளர், ஊழியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சியளிக்க வேண்டும்.தீ விபத்து ஏற்படும் போது நோயாளிகள் மற்றும் பணியாளர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து திட்டவரைபடத்தை மருத்துவமனை வளாகத்தில் அங்காங்கே வைக்க வேண்டும். பணியாளர், ஊழியர்களுக்கு பயிற்சியளித்து, விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்; ஒத்திகையும் மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.