உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்தை தடுக்கவா... ஏற்படுத்தவா? பேரி கார்டுகளால் மாளாத தொல்லை

விபத்தை தடுக்கவா... ஏற்படுத்தவா? பேரி கார்டுகளால் மாளாத தொல்லை

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றத்தடுப்பு மற்றும் விபத்துக்களை போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 'ஸ்பார்ட் பைன்' முறையில் அபராதம் விதித்து வருகின்றனர். இதன் காரணமாக, நகரின் பல இடங்களில் காலை, மாலை, இரவு என, பிரதான ரோடுகளில் ஆங்காங்கே நின்று வாகனங்களை பிடித்து சோதனை செய்கின்றனர்.விபத்து ஏற்படும் பகுதி, ரோடுகள் சந்திப்பு உள்ள பகுதி, போலீசார் வாகன தணிக்கை செய்யும் இடங்களில் பேரி கார்டு தடுப்புகளை போலீசார் இரவில் அமைக்கின்றனர்.அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இடத்தில், வேகத்தை குறைத்து கடந்து செல்லும் வகையில் வைக்கின்றனர். தற்போது, போலீசார் அமைக்கப்படும் பேரி கார்டுகளால் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது.

லாரி கவிழ்ந்தது

மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் பேரி கார்டுகளை தாறுமாறாக போலீசார் ரோட்டில் வைத்துள்ளனர். மங்கலத்தில் இருந்து அவிநாசி செல்லும் ரோட்டில் குறுகிய இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன் நுால் கோன் ஏற்றி வந்த சரக்கு வாகனம், தடுப்புகளில் நுழைந்து செல்ல முடியாமல், கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.எனவே, ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை போதிய இடைவெளியில் அமைக்கவும், அதே நேரத்தில் குறிப்பிட்ட ரோட்டில் பல இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தாமல், தேவையான இடத்தில் அமைக்கவும் போலீசாருக்கு கமிஷனர் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை