கைதி தப்பியோட்டம்; 5 பேர் சஸ்பெண்ட்
திருப்பூர்; ஹிந்து முன்னணி திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர் பாஸ்கர பாண்டியன், 49, கடந்த நவ., 16ம் தேதி இரவு, நல்லுார் அருகே டூவீலரில் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை தாக்கி, ஆறு சவரன் நகையை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, திருப்பூர் பாரதி நகரை சேர்ந்த சூர்யா, 24 உட்பட இருவரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.கடந்த, 21ம் தேதி சிறையில் கைதி சூர்யா தப்பியது தெரியவந்தது. கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமார் திருப்பூர் மாவட்ட சிறையில் விசாரணை நடத்தினார். பணியில் கவனக்குறைவாக இருந்தது தொடர்பாக, உதவி சிறை அலுவலர்கள் கங்காராஜன், சீதா, போலீசார் ராஜபாண்டி, சக்திவேல், ரவிக்குமார் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.