திட்டப்பணிகள் ஆய்வு
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு நடத்தினார். ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம், வேலை உறுதியளிப்புத் திட்டம், நமக்கு நாமே திட்டம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் நடைபெற்றுவரும் பணி களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.