கனிம வளக் கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பல்லடம், : கனிமவள கடத்தலுக்கு அதிகாரிகளே உறுதுணையாக இருப்பதை கண்டித்துபல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம், கொசவம்பாளையம் ரோட்டில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.ஹிந்து பரிவார் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாய் குமரன், ஹிந்து பாரத் சேனா மாவட்ட தலைவர் குமார், செயலாளர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.''விதி மீறல்களில் ஈடுபட்ட கல்குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறை அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாரதசக்கரவர்த்தியின் தீர்ப்பை வரவேற்கிறோம். கோர்ட் உத்தரவை பின்பற்றி குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தை அரசை நடத்துவது போல், கல்குவாரிகளையும் தமிழக அரசே நடத்த வேண்டும். அரசுக்கு வருவாய் அதிகம் கிடைப்பதுடன், மக்களும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்'' என தெரிவிக்கப்பட்டது.