உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அந்த சார் யார்; சேவ் அவர் டாட்டர் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க.,வினர் கைது

அந்த சார் யார்; சேவ் அவர் டாட்டர் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க.,வினர் கைது

திருப்பூர் : சென்னையில், அண்ணா பல்கலை மாணவி உட் பட, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமை வகித்தனர். தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தை பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கினார்.போலீசார் கைது செய்வதாக கூறினர். 'டூ மினிட்' என்று கூறிவிட்டு, கோஷங்களை தொடர்ந்தார். போலீசார் வற்புறுத்தியதால், ஆக்ரோஷமாக கோஷமிட்டபடி, போலீஸ் ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஏறினர்.ஐம்பது பெண் நிர்வாகிகள் உட்பட, 300க்கும் அதிகமானவர்களை, போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். அதற்கு பின்னரும், ஆங்காங்கே நின்றிருந்த கட்சியினர், தாங்களாக வந்து, வாகனங்களில் ஏறிச்சென்றனர்.அமைப்பு செயலாளர் சிவசாமி, முன்னாள்எம்.எல்.ஏ.,க்கள் பழனி சாமி, நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலை வர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிஹரசுதன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், காங்கயம் நகர செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கோஷமிட்டபடி கைதாகினர்.நுாற்றுக்கும் மேற்பட்டோர், 'அந்த சார் யார்...? மற்றும் 'சேவ் அவர் டாட்டர்' என்று ஆங்கி லத்தில் அச்சிட்டிருந்த பதாகைகளை ஏந்தியபடி கைதாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை