உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இனி போராட்டம் காங்., எச்சரிக்கை

இனி போராட்டம் காங்., எச்சரிக்கை

திருப்பூர்; காங்கேயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து, செவந்தாம்பாளையம் வரை செல்லும் தார் ரோடு, நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.'விரிவுபடுத்தப்பட்ட சாலையோரம் உள்ள மின் கம்பங்களை, சாலையோரம் மாற்றியமைக்க வேண்டும்' என, அப்பகுதி பொதுமக்கள் மற்றும், 48 வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலை மற்-றும் மின்வாரியத்தினருக்கு இடையே இவ்விவ-காரத்தில் ஒருமித்த கருத்து இல்லாததால், மின்-கம்பங்கள் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது.கவுன்சிலர் விஜயலட்சுமி கூறுகையில், ''மின்-கம்பங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, வார்டு கவுன்சிலர் என்ற முறையில் இரு அரசு துறையினரிடத்திலும் பலமுறை பேசியும் பல-னில்லை. சாலையில் தார் போட்டு புதுப்பிப்பு பணி துவங்கும் முன், மின்கம்பங்களை சாலை-யோரம் மாற்றியமைக்காவிட்டால், மக்களை திரட்டி, சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டியிருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !