மேலும் செய்திகள்
தொடர் விடுமுறை 3 நாட்கள் சிறப்பு பஸ்
24-Aug-2024
திருப்பூர் : அவிநாசிபாளையம் அருகே, கோவில்பாளையம் ராமசாமி கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை மட்டும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. முதல் சனிக்கிழமையான இன்று கோவிலுக்கு வரும் பக்தர் வசதிக்காக, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சிறப்பு பஸ்கள் செட்டி பாளையம், அவிநாசிபாளையம் வழியாக ராமசாமி கோவிலுக்கு 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது; காங்கயம், பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 டவுன்பஸ்கள் இயக்கப்படுகிறது.திருப்பூர் - காங்கயம் வழியில் சிவன்மலை அருகே உள்ள பெருமாள்மலை மற்றும் சேவூர் அருகேயுள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்களுக்கும், 10 சிறப்பு பஸ் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24-Aug-2024