உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெதப்பம்பட்டியில் நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்

பெதப்பம்பட்டியில் நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்

உடுமலை : கால்நடை மருத்துவ கல்லுாரியின், பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில், நாளை செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை வளாகம் பெதப்பம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கால்நடைகளுக்கான அனைத்து வகை சிகிச்சைகளும், கால்நடை வளர்ப்போருக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.வரும், 28ம் தேதி, உலக வெறிநோய் தடுப்பு தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில், செல்லப்பிராணிகளுக்கான (நாய், பூனை) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம், நாளை (27ம் தேதி)நடைபெற உள்ளது. மக்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளை அழைத்து வந்து, இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இம்முகாம், காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வைரை நடைபெற உள்ளது.மேலும், செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாமிலும் பங்கேற்று பயன்பெறலாம் என, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை