உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளிக்கு முன் ரயில் நிலையம் புதுப்பொலிவு

தீபாவளிக்கு முன் ரயில் நிலையம் புதுப்பொலிவு

திருப்பூர்; 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனை விரிவுபடுத்தும் பணி, 2023 முதல் நடந்து வருகிறது. 18 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட பணியில். முதல் பிளாட்பார்ம் நுழைவு வாயில், டிக்கெட் கவுன்டர், தரைத்தளம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு தருவாயை எட்டியுள்ளது. இரண்டாவது பிளாட்பார்ம் ஒட்டிய பகுதிகளில் பணிகள் துவங்கியது.தற்போதுள்ள டூவீலர் ஸ்டாண்டை விரிவாக்கும் வகையில் புதிய ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. புஷ்பா தியேட்டர் ஸ்டாப், ரவுண்டானா சந்திப்பில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் சிறியதாக இருப்பதால், ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றும் இரு வேறு இடங்களில் நுழைவு வாயில் மாற்றப்பட உள்ளது; இதற்கான பணிகளும் துவங்கியுள்ளது.' அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 50 சதவீத பணிகள் முதல் பிளாட்பார்மில் நிறைவு பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் முடித்து, ரயில்வே ஸ்டேஷன் புதுப்பொலிவுடன் திறக்கப்படும்,' என, ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி