உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடுமலையில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, வணிக நிறுவனங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. மேலும், இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !