கோவிலில் நகை, பணம் திருட்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார்
திருப்பூர், : ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், ஸ்ரீ சீரங்கதாத்தா, ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:சுவாமிக்கு பயன்படுத்தப்படும் நகை, ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள், கோவிலுக்குள் கன்னிமூலையில் ஒரு லாக்கர் வாங்கி வைத்து பராமரிக்கப்படுகிறது. 175 சவரன் நகை உள்ளது. உண்டியல் வசூல் செய்த பணம், 13 லட்சம் ரூபாய் லாக்கரில் இருந்தது. இதுதவிர, உண்டியலில், ஏழு லட்சம் ரூபாய் இருந்தது.லாக்கரில் பணம், நகைகள் வைத்து, லாக்கர் பூட்டப்பட்டு, அதற்கான சாவி என்னிடம் மட்டுமே இருந்தது. கோவில் நிர்வாகத்துக்குள் சிலர், கோவில் பணத்தை சொந்த செலவுகளுக்கு தருமாறு என்னை வற்புறுத்தினர்.நான் தர மறுத்ததால், கடந்த மாதங்களாக லாக்கரை திறந்து, நகைகள் எடுத்து பூஜைக்கு பயன்படுத்த வில்லை. ரூபாயை பங்கிட்டு கொண்டனர்.பணத்தை திருப்பி செலுத்துவாக தெரிவித்தனர். பின், இதுவரை தொகையை செலுத்தவில்லை. தற்போது, லாக்கரை உடைத்து எடுத்து, நகை, பணத்தை திருடியுள்ளனர். திருடிய நபர்கள் மீது நடவடிக்கை தேவை.