மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
21-Nov-2024
உடுமலை; ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு குடிமங்கலத்தில் நடந்தது. மாநாட்டையொட்டி, நால்ரோட்டில் இருந்து சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். நிர்வாகிகள் துளசிமணி, இசாக், சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல் மற்றும் நில அளவீடு செய்ய, விவசாயிகளிடம் அதிகளவு லஞ்சம் வாங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஏ.பி., கால்வாய்களை பழுது பார்ப்பது, புதுப்பிப்பது என்ற பெயரில், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் முறையாக பணி செய்யாமல், கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமற்ற விதை விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இ.கம்யூ., பொறுப்பு செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, சவுந்தரராஜன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
21-Nov-2024