உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

உடுமலை; உடுமலையில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம், உடுமலை தென்னைமரத்து வீதி சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க உறுப்பினர் புருேஷாத்தமன் வரவேற்றார். தலைவர் மணி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், உறுப்பினர்களின் சேர்க்கையை தீவிரப்படுத்த கலந்துரையாடல் நடந்தது. சங்க உறுப்பினர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் அழகர்சாமி,கடந்த மாதகூட்ட அறிக்கை வாசித்தார். ரயில் பயணத்தில் சலுகை, மருத்துவ காப்பீடு பிரச்னை சரிசெய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்தாஸ் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ