உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சி

 நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சி

அவிநாசி: தை மாதம் வரும் பவுர்ணமி நாளிலும், அதன் தொடர்ச்சியாகவும், நிலாப்பிள்ளைக்கு சோறு மாற்றுதல் என்ற நிகழ்ச்சி பாரம்பரியமாக கிராமங்களில் நடந்து வருகிறது. அவ்வகையில், அவிநாசி, கச்சேரி வீதி, மாமரத் தோட்டத்திலுள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை சார்பில் நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சி ஒரு வாரமாக நடைபெற்றது. இதில், தினமும் இரவு பெண்கள், சிறுமியர் ஒன்று திரண்டு கும்மிடியத்து, கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். நிறைவு நாளில், அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது. இதில், தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை, அவிநாசி கம்பன் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை