மேலும் செய்திகள்
வரி கொடா இயக்கம் நடத்த வணிகர் சங்கத்தினர் முடிவு
06-Nov-2024
பூ மார்க்கெட் கடை ஒதுக்கீடு வியாபாரிகள் ஆட்சேபனை
03-Nov-2024
சோஷியல் மீடியாவில் கட்டுப்பாடுகள் தேவை!
08-Nov-2024
அவிநாசி; சேவூர் ரோடு, சூளை பகுதியில் இருந்து அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோர கடைகள் ஏராளமாக உள்ளன. இவற்றால் பொருளாதார இழப்பை சந்திப்பதோடு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக, நிரந்தரக்கடைகள் நடத்திவரும், அவிநாசி அனைத்து வணிகர் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வணிகர்கள், கடந்த 8ம் தேதி புதிய பஸ் நிலையம் எதிரில் உண்ணாவிரதம் இருந்தனர்.பேச்சுவார்த்தையில், ஒரு வார காலத்திற்குள் கடைகளை முறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மீண்டும் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில், அனைத்து தரப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.புதிய பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவது:தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ள கடைகள் முன்பாகவும், விடுமுறை நாட்களில் அரசு அலுவலகம் முன்பாகவும் கடைகளை அமைக்க அனுமதிப்பது; அதிக அளவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைக்க அனுமதி கிடையாது என்று தீர்மானிக்கப்பட்டது.இதற்கு சாலையோர வியாபாரிகள் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடர் போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்த அவிநாசி அனைத்து வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
06-Nov-2024
03-Nov-2024
08-Nov-2024