உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 43 வயதில் 44 வழக்கு பலே கொள்ளையன் கைது

43 வயதில் 44 வழக்கு பலே கொள்ளையன் கைது

திருப்பூர், ; தாராபுரத்தில் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக மதுரையை சேர்ந்த பலே கில்லாடியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, 44 வழக்கு இருப்பது தெரிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சிலுக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 60; விவசாயி. கடந்த டிச., மாதம் இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 55 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. புகார் தொடர்பாக, மூலனுார் போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவு, பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.அதில், திருட்டில் தொடர்பு உடைய ஆசாமியை, மதுரையில் வைத்து தனிப்படை போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர் வாடிபட்டியை சேர்ந்த தனுஷ் என்கின்ற தனுஷ்கோடி, 43 என்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், இவர் மீது மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, விருதுநகர், திருப்பூர், காரியாபட்டி, கீரனுார் என, பல இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை என, தாராபுரம் வழக்கு உடன் சேர்ந்து, 44 வழக்கு இருப்பது தெரியவந்தது.இவர் தனது செலவுக்கு பணம் தேவையென்றால், ஊர் விட்டு ஊர் சென்று, புறநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் வீடுகளில் நோட்டமிட்டு கைவரிசை காட்டுவதில் கில்லாடி. போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பலே கொள்ளையனை தற்போது தாராபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !