ராயல் கார்டன் பிரம்மாண்ட விற்பனை மற்றும் திறப்பு விழா
உடுமலை : உடுமலை - திருப்பூர் மெயின்ரோட்டில், சின்னவீரம்பட்டி அருகே, 40 ஏக்கர் பரப்பளவில், 700க்கும் அதிகமான வீட்டு மனைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய 'ராயல்கார்டன்' அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, 500 முதல் 3,500 சதுர அடிகளில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 'ராயல் கார்டன்' பிரம்மாண்ட விற்பனை திருவிழா மற்றும் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், 'ராயல் கார்டன்', நிறுவன பங்குதாரர்கள் பழனிச்சாமி, செந்தில்குமார், சுரேஷ்குமார், நடராஜ் வரவேற்றனர்.தி.மு.க., திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாரி ஐ.பி.எஸ்., பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன்,ஸ்ரீ அர்சனேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் முத்துக்குமாரசாமி, உடுமலை திருப்பதி கோவில் நிர்வாக அறங்காவலர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் பாலசுந்தரம், ஸ்ரீ கற்பக விநாயகா கோவில் தலைவர் லோகநாதன், மூத்த வக்கீல் சிதம்பரசாமி, ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.திறப்பு விழாவையொட்டி, விஜய் 'டிவி' நட்சத்திரங்கள் பங்கு பெற்ற நட்சத்திர கொண்டாட்டம் நடந்தது.