மேலும் செய்திகள்
ரூ.6.87 லட்சம் சுருட்டிய ஆசாமிக்கு போலீஸ் வலை
04-Jul-2025
திருப்பூர்; திருப்பூரில், ஓட்டல் முன்பதிவு மூலம் கூடுதலாக சம்பாதிக்கலாம் என கூறி, வாலிபரிடம், 9.36 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியது. திருப்பூர், தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த, 31 வயது வாலிபர். கடந்த, 2ம் தேதி சமூகவலைதளத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், ஓட்டல்களை முன்பதிவு செய்வதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதை நம்பிய வாலிபர், அந்த லிங்குக்குள் சென்று, அவர்கள் கூறியதை பின்தொடர்ந்து, வாட்ஸ்அப் குழுவில் இணைந்தார். தொடர்ந்து, பல்வேறு தவணைகளாக, 9.36 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதலாக பணம் கேட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
04-Jul-2025