மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டி ஆலோசனை கூட்டம்
08-May-2025
மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்துவதோடு, உடலை பேணும் வகையில், உடற்கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கோவிந்தசாமி கூறியதாவது:உடற்பயிற்சி என்பது இன்றைக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை என, அனைவருக்கும் தேவையான ஒன்று. இந்த உடலுக்காக, 24 மணி நேரத்தில், 30 நிமிடம் முதல், ஒரு மணி நேரம் வரை ஒதுக்க வேண்டும். யோகா, வாக்கிங், ஓட்டம், சைக்கிளிங் என ஏதாவது ஒரு பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் சுய ஒழுக்கம் வருவதோடு, தன்னம்பிக்கையும் நமக்குள் ஏற்படும்.பள்ளியில் உடற்கல்வி பாடவேளையின்போது, உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடும்போது உடல், மனம் புத்துணர்ச்சி ஏற்படும், படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த முடியும். விளையாட்டில் ஒருவர் கவனம் செலுத்தும் போது, தவறான வழியில் செல்லமாட்டார். தவறான சேர்க்கையும் இருக்காது. மொபைல் போன்களில் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல், மைதானத்தில் ஏதாவது விளையாட்டு, பயிற்சி செய்யும் போது, ஆர்வம் ஏற்பட்டு விடும். மைதானத்துக்கு வந்தாலே, மொபைல் போனுக்கு ஒதுக்கும் நேரம் குறைந்து விடும். உடல், மனம், கல்வி, ஞாபகத்திறன் நன்றாக இருக்கும்.
08-May-2025