உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ- -நாம் முறையில் பாதுகாப்பான விற்பனை; மக்காச்சோள விவசாயிகளுக்கு அழைப்பு

இ- -நாம் முறையில் பாதுகாப்பான விற்பனை; மக்காச்சோள விவசாயிகளுக்கு அழைப்பு

பல்லடம்; 'இ--நாம்' திட்டத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் விற்பனை மேற்கொள்ளுமாறு, மக்காச்சோள விவசாயிகளுக்கு, பல்லடம் வேளாண் மற்றும் வணிக துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வேளாண் மற்றும் வணிகத்துறை முதுநிலை செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: தமிழக அரசின் வேளாண்துறை சார்பில், விவசாயிகள் பயனடையும் வகையில், -மங்கலம் ரோட்டில் செயல்பட்டு வரும் வேளாண் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆயிரம், 2 ஆயிரம், 600 மற்றும் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் உள்ளன. விவசாயிகள், தாங்கள் விளைவிக்கக்கூடிய தேங்காய் கொப்பரை,தானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட விளை பொருட்களை, குடோன்களில் பாதுகாத்து வைத்து, விற்பனை செய்து பயனடையலாம். சமீப நாட்களாக, அதிக அளவு மக்காச்சோளத்தை விவசாயிகள் பாதுகாத்து விற்பனை செய்து வருகின்றனர். மத்திய அரசின், தேசிய வேளாண் சந்தை எனப்படும், 'இ--நாம்' திட்டத்தை பயன்படுத்தி, இந்த விற்பனை பரிவர்த்தனை நடந்து வருகிறது. விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த மக்காச்சோளர்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உலர வைத்து, வியாபாரிகளுக்கு விற்பனையும் செய்யலாம். ஒரு சதவீத 'செஸ்' வரியும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகளிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மாறாக, வியாபாரிகளிடம் கட்டணம் பெறப்படும். விவசாயிகள் மற்றும்- வியாபாரிகள் இடையிலான பரிவர்த்தனை முடிந்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை செலுத்திய பின்னரே, வியாபாரிகளிடம் விளை பொருட்கள் ஒப்படைக்கப்படும். இதனால், விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது. சமீப நாட்களாக, 200 டன்னுக்கும் அதிகமான மக்காச்சோளம் கிடங்கில் உலர வைத்து விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்காச்சோளத்தை உலர்த்தவும், விற்பனை செய்யவும் சிரமப்படும் விவசாயிகள், பல்லடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ