விசைத்தறி பயன்பாடு மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன
பல்லடம் : பல்லடம் அடுத்த கேத்தனுாரில், 4 ஏக்கர் பரப்பளவில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டட கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுப் பயன்பாட்டு மைய வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். துணைத் தலைவர் சக்திவேல், கண்ணம் பாளையம் சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.பொது பயன்பாட்டு மைய பங்குதாரர்கள் ரமேஷ், சதாசிவம், கேத்தனுார் இயற்கை விவசாயி பழனிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.